பிலிப்பைன்ஸ் நாட்டில் பசே நகரத்தில் இலங்கையைச் சேர்ந்த மதகுரு ஒருவர் 9 வயது சிறுமி ஒருவரை தவறான நோக்குடன் தொட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பசே நகரத்தில் லிபிடப் பிரதேசத்தில் உள்ள உணவு விடுதியொன்றில் தாயாருடன் இருந்த சிறுமியொருவரின் பிறப்புறுப்புக்களை குறித்த மதகுரு தொட்டார் என பாதிப்புக்குள்ளாகிய பெண் தெரிவித்துள்ளார்.
.சம்பவத்தை நேரில் கண்ட தாய் வீதி சுத்திகரிப்பில் ஈடுபட்டிருந்த ஒருவரின் உதவியை நாடி குறித்த இலங்கை மதகுருவை கைது செய்வதற்கான நடவடிக்கை எடுத்துள்ளார்.
43 வயதான குறித்த சந்தேக நபர் மனிலாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் கடமையாற்றி வந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இவர் மீது பாலியல் மற்றும் சிறுவர் துஷ்பிரயோக சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சந்தேக நபர் அவரது சட்டத்தரணியுடன் மாத்திரம் கலந்துரையா வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment