Thursday, July 14, 2011

புலம்பெயர் மக்கள் வடக்கில் முதலீடு செய்ய வேண்டுமாம் - அமைச்சர் பசில்

வடக்கு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவென புலம்பெயர் தமிழர்களை வட பகுதியில் முதலீடுகளை செய்யுமாறு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

1983ம் ஆண்டுக்குப் பின்னர் நாட்டில் அசாதாரண சூழல் நிலவியதாகவும் அது கடந்த 2009ம் ஆண்டு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில் வடக்கு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவென அரசாங்கம் தற்போது அங்கு அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்துள்ள நிலையில் புலம்பெயர் மக்களும் வடக்கில் முதலீடுகளை செய்ய வேண்டுமென அமைச்சர் பசில் ராஜபக்ஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.

0 comments:

Post a Comment