எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அடுத்த வாரமளவில் பிரித்தானியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக அவரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பொதுநலவாய நாடுகளின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் பங்கேற்கவே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரித்தானியா செல்லவுள்ளதாக அவரது ஊடகப்பிரிவு குறிப்பிட்டது.
ரணில் விக்ரமசிங்கவுடன் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ்வும், பிரித்தானியா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, லண்டனில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment