தமிழ் சினிமாக்களில் முன்பு பிசியாக நடித்து வந்த ரீமா சென், தனது தாய் மொழியான வங்கத்தில் தாசி வேடத்தில், படுக்கை அறைக்காட்சிகள் உள்ளிட்ட கவர்ச்சிக் காட்சிகளில் நடித்த படம் ஒன்று தமிழுக்கு இளவரசி என்ற பெயருடன் மொழிமாற்றமாகி வருகிறது.
இந்தப் படம் 2004ம் ஆண்டு வங்கத்தில் வெளியான படம். படத்தின் பெயர் இதி ஸ்ரீகாந்தா. அப்படியென்றால், தங்கள் உண்மையுள்ள, ஸ்ரீகாந்தா என்று பொருள். இப்படத்தைத்தான் தற்போது இளவரசி என்ற பெயரில் மொழிமாற்றம் செய்துள்ளனர். படத்தைப் பார்த்து பயந்து போன சென்சார் போர்டு ஏ சர்டிபிகேட் கொடுத்துள்ளதாம். காரணம் படத்தில் ரீமா சென் நடித்த ஒரு படுக்கை அறைக் காட்சி.
கவர்ச்சிகரமான வேடங்களில் நடித்து பரபரப்பை ஏற்படுத்துவது இக்கால ஹீரோயின்களின் புதிய பழக்கமாகி வருகிறது. குறிப்பாக பாலுணர்வைத் தூண்டும் வகையிலான வேடங்களில் முன்னணி நடிகைகள் சிலர் நடித்து பரபப்பை ஏற்படுத்தி விடுகிறார்கள்.
காமசூத்ரா படத்தில் ரேகா படு கவர்ச்சிகரமாக நடித்து பயமுறுத்திறார். ஃபயர் படத்தில் நந்திதா தாஸ் ஓரினச்சேர்ககையில் ஈடுபடும் பெண்ணாக வந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஐஸ்வர்யா ராயே கூட ஒரு படத்தில் படு கவர்ச்சிகரமாக நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் நாயகிகள் யாரும் இப்படி நடித்ததில்லை என்றாலும் அவர்கள் தகுதிக்கேற்ற வகையில் கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார்கள்.
அந்த வகையில் ரீமா சென் நடித்த படம்தான் இந்த இதி ஸ்ரீகாந்தா. இதில் தாசி வேடத்தில் நடித்துள்ளார் ரீமா சென். தாசி வாழ்க்கையில் பல சித்திரவதைகளை சந்திக்கும் அவர் கடைசியில் அதை விட்டு விலகி சாதாரண குடும்ப வாழ்க்கைக்குத் திரும்புகிறார்.
படத்தில் ஒரு படுக்கை அறைக் காட்சியில் மிகவும் கவர்ச்சியாக நடித்துள்ளார் ரீ்மா சென். இதைப் பார்த்த சென்சார் போர்டு உறுப்பினர்கள் படத்துக்கு ஏ சான்றிதழ் கொடுத்துள்ளனராம்.Topics: ரீமா சென், இதி ஸ்ரீகாந்தா, இளவரசி, reema sen, bengali movie, iti srikantha, ilavarasi
0 comments:
Post a Comment