வாக்கு போட காசு கொடுக்கும் டக்கிளசு மாமா -இமெல்டா உதவியாம் ..!
உள்ளுராட்சி தேர்தலில் மற்றுமொரு ஏமாற்று மோசடி ஒன்றை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா செய்து வருகிறார் என கடந்த காலங்களில் அனுபவப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஒவ்வொரு கிராமமாக அமைச்சர்கள் சகிதம் செல்லும் டக்ளஸ் தேவானந்தா ஒவ்வொரு சனசமூக நிலையம், விளையாட்டு கழகம், கோவில்கள் என காசோலைகளை அள்ளி வீசி வருகிறார்.
இந்த காசோலைகள் அனைத்தும் 26ஆம் 27ஆம் திகதிகள் இடப்பட்டே வழங்கப்படுகிறது என அதிர்வு இணையம் அறிகிறது.
இதேபோன்றுதான் கடந்த பொதுத்தேர்தல் நடைபெற்ற காலங்களிலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா செல்லாத ஊரில் இல்லை. கொடுக்காத காசோலை இல்லை. ஒவ்வொரு ஊருக்கும் காசோலைகளை வழங்கினார். கடந்த பொதுத்தேர்தல் 2010.ஏப்ரல் 8ஆம் திகதி நடைபெற்றது. டக்ளஸ் வழங்கிய சகல காசோலைகளும் 12ஆம் திகதியிடப்பட்டே வழங்கப்பட்டது.
காசோலைகளை பெற்றுக்கொண்ட அமைப்புக்கள், கோயில் நிர்வாகிகள் 12ஆம் திகதி வங்கியில் அக்காசோலைகளை வைப்பில் இட்ட போது அத்தனை காசோலைகளும் பணம் இல்லை என திரும்பி வந்தன. சில காசோலைகளுக்கு பணம் வழங்குவது நிறுத்தப்பட்டிருப்பதாக பதில் வந்தது (Stop Payment)
0 comments:
Post a Comment