Thursday, July 14, 2011

இந்தியில் ரீமேக்காகும் கோ: கே.வி. ஆனந்த் தீவிர ஆலோசனை

சென்னை: தமிழில் வெற்றிகரமாக ஓடிய "கோ" படத்தை இந்தியில் எடுக்க முடிவு செய்துள்ளனர்.

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் ஜீவா-கார்த்திகா, பியா நடிப்பில் வெளியான படம் "கோ" . திரையரங்குளுக்கு வரும் தமிழ் படங்கள் எல்லாம் ஒரு வாரத்தில் வெளியேறிய நேரத்தில் கோ வெற்றிப்படமாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் ஜீவாவுக்கு நட்சத்திர அந்தஸ்து கிடைத்தது.

கார்த்திகாவுக்கும் இதுதான் பெயர் வாங்கிக் கொடுத்த படம். இதில் நடித்த பியா பாஜ்பாயின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.

இத்தனை சிறப்புகள் வாயந்த கோ படத்தை இந்தியில் எடுப்பது குறித்து கே. வி. ஆனந்த் ஆலோசித்து வருவதாக அந்த படத்தில் வில்லனாக நடித்த அஜ்மல் தெரிவித்தார்.

இந்தியில் ஜீவா கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூர் அல்லது ஷாகித் கபூரை நடிக்க வைக்க திட்டமிட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

முதலில் ஜீவா கதாபாத்திரத்தில் அக்ஷய் குமார் நடிப்பார் என்று கூறப்பட்டது. தற்போது ரன்பீர் அல்லது ஷாகித் நடிக்கக்கூடும் என்று தெரிகிறது.Topics: ko, remake, hindi, kv anand, கோ, ரீமேக், இந்தி, கே வி ஆனந்த்

0 comments:

Post a Comment