கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்று ஈரற்பெரியகுளம் பிரதேசத்தில் இன்று நண்பகல் வீதியை விட்டுவிலகி விபத்துக்குள்ளானதில் 16 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் அனைவரும் வவுனியா மாவட்ட அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.காயமடைந்தவர்கள் அனைவரும் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விபத்துச் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment