Thursday, July 14, 2011

15வயது சிறுமியை கடத்தும் முயற்சி முறியடிப்பு ..!

15வயது சிறுமியை கடத்தும் முயற்சி முறியடிப்பு ..! 

மல்லாவி சந்தைப் பகுதியில் 15 வயதுச் சிறுமியொருவரைக் கடத்திச் செல்ல எடுக்கப்பட்ட முயற்சி முறியடி க்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 நேற்று முன்தினம் முற்பகல் 10 மணியளவில் அனிஞ்சியன் குளத்தைச் சேர்ந்த இந்தச் சிறுமி பொருள்களை வாங்குவதற்காக மல்லாவிச் சந்தைக்கு வந்துள்ளார். சந்தைப் பகுதிச் சூழலை அண்டிய இடத்தில் இவர் வந்து கொண்டிருக்கும் போது மோட்டார்சைக்கிளில் வந்த நபரொருவர் இந்தச் சிறுமியின் கையைப் பிடித்து இழுத்ததுடன் தம்மோடு வருமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் சிறுமி அந்த நபருடன் தர்க் கத்தில் ஈடுபட்டார். இதனை அருகேயுள்ள இராணுவ முகாமிலிருந்து நீர் எடுக்க வந்த இராணுவத்தினர் கண்டுள்ளனர். இதை அவதானித்த மோட்டார் சைக்கிளில் வந்த நபர் வேகமாக ஓடித் தப்பியுள்ளார். உடனடியாக இராணுவத்தினர் மல்லாவி இராணுவப் பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸாருக்கு அறிவித்ததன் பேரில் இராணுவப் பொறுப்பதிகாரி உட்படப் படையினரும், பொலிஸாரும் தேடு தலை மேற்கொண்டனர். குற்றவாளி இதுவரை பிடிபடவில்லை. சிறுமியின் வாக்குமூலத்தை மல்லாவிப் பொலிஸார் பதிவுசெய்துள்ளனர். இந்தச் சம்பவம் இந்தப் பகுதியிலுள்ள மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளமையை அவதானிக்க முடிந்தது.

0 comments:

Post a Comment