Thursday, July 14, 2011

ரஜினி ராணாவை மீண்டும் தொடங்குவது எப்போது?

Friday, Jul 15, 2011நடிகர் ரஜினிகாந்த் உடல்நலம் பெற்று சென்னை திரும்பியுள்ள நிலையில் ராணா படத்தின் படப்பிடிப்பு மீண்டும் அக்டோபரில் தொடங்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த செப்டம்பர் வரை ஓய்வெடுக்க உள்ள ரஜினிகாந்த், ராணா படப்பிடிப்பு தொடர்பாக இயக்குநருடன் ஆலோசனை நடத்த உள்ளார். அக்டோபர் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கலாம் என்று திரைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

படம் தொடர்பான கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் இந்த விஷயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. படப்பிடிப்பு தொடங்கும் வரை உள்ள இடைப்பட்ட காலத்தில் கதை மற்றும் திரைக்கதையை இன்னும் மெருகேற்றும் பணி நடக்கும் எனத் தெரிகிறது.

போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் வாஸ்துபடி மராமத்துப் பணிகள் நடப்பதால் ரஜினி இப்போது கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் தங்கி ஓய்வெடுப்பார்.

முன்னதாக சிங்கப்பூரில் 6 வார சிகிச்சைக்குப் பின்னர் ரஜினிகாந்த் நேற்று சென்னை திரும்பினார். விமானநிலையத்தில் ரசிகர்கள் அவரை தலைவா என கோஷம் எழுப்பி உற்சாகத்துடன் வரவேற்றனர்.

தனக்கே உரிய ஸ்டைல் மற்றும் சிரிப்புடன் கண்ணாடி அணிந்து வந்த ரஜினி, ரசிகர்களை நோக்கி கைகளை அசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ரசிகர்களுக்கு தன் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார். விரைவில் தன் ரசிகர்களைச் சந்திப்பார் அவர் என்றும் கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment