Thursday, July 14, 2011

ரூ.45 லட்சம் கேட்டு மிரட்டல்: இணையதள ஆசிரியர் மீது நடிகர் வடிவலு போலீசில் புகார்

சென்னை: ரூ 45 லட்சம் கேட்டு தன்னை இணையதள ஆசிரியர் ஒருவர் தன்னை மிரட்டுவதாக சென்னை மாநகர போலீசில் புகார் செய்துள்ளார் நடிகர் வடிவேலு.

நடிகர் வடிவேலுவின் மேனேஜர் சங்கர் நேற்று போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அதில், "ரூ.45 லட்சம் பணம் கேட்டு, வடிவேலுவை இணையதள ஆசிரியர் ஒருவர் போனில் பேசி மிரட்டுகிறார். மலேசியாவில் கலைநிகழ்ச்சி நடத்த ஒப்புக்கொண்டுவிட்டு வரவில்லை என்றும் இதற்காக பணம் தரவேண்டும். இல்லாவிட்டால் இணைய தளத்தில் தவறான தகவல்களை வெளியிட்டு அசிங்கப்படுத்திவிடுவேன் என்றும் மிரட்டல் நபர் அடிக்கடி பேசுகிறார். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புகார் மனு மீது விசாரணை நடத்த விருகம்பாக்கம் போலீசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.Topics: vadivelu, website editor, இணையதள ஆசிரியர், வடிவேலு, மிரட்டல்

0 comments:

Post a Comment