பொத்துவில் கோமாரி பிரதேசத்தில் கதிர்காமத்தில் இருந்து பயணிகளுடன் அக்கரைப்பற்றுக்கு சென்ற இலங்கை போக்குவரத்து சபை பஸ் வண்டி இன்று அதிகாலை வீதியை விட்டு விலகி இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் படுகாயமடைந்தள்ளனர் என பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.
பொத்துவில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டி கதிர்காமத்திலிருந்து புதன் கிழமை இரவு 11.30 பயணிகளுடன் அக்கரைப்பற்றுக்கு சென்றபோது இன்று அதிகாலை 3.30 மணியளவில் கோமாரி முருகன் ஆலயத்திற்கு முன்னால் வீதியை விட்டு விலகி மின்சார தூண்களுடன் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் சாரதியும் சிறுமி ஒருவொரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து தொடர்பான விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
0 comments:
Post a Comment