துயர் துடைப்பு மாத நிகழ்வுகள்
இத்துடன் தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் வருடாந்த துயர் துடைப்பு மாத, நிகழ்வுகளைப் பற்றிய ஊடகங்களிற்கான சமூக அறிவித்தலையும், நேயர்களுக்கான கடிதம் மற்றும் நிதி அன்பளிப்புப் படிவங்களையும் இணைத்து அனுப்பியுள்ளோம். இம்மின்னஞ்சலைப் பெறும் ஊடக நண்பர்களே, தயவு செய்து உங்கள் ஊடகங்களின் ஊடாக, துயர் துடைப்பு மாத நிகழ்வுகள் நடைபெற்று முடியும் வரை தயவுகூர்ந்து அவுஸ்திரேலிய வாழ் தமிழ் மக்களுக்கு முழுமையான உங்கள் ஆதரவை தெரியப்படுத்துமாறு அன்போடு கேட்டுக் கொள்கின்றோம்.
நீங்களும், தனிப்பட்ட முறையிலும் இந்நிகழ்வுகளைப் பற்றி தெரிந்த உங்கள் உறவுகளிற்கு தெரியப்படுத்தி கறுப்பு ஜுலை நினைவாக நடைபெறும் 15வது இரத்த தானம்(6th August) நிகழ்விலும் பங்கெடுத்து கொள்ளுவதோடு, தாயகத்து தமிழ் மக்களின் தற்போதைய துயர் நிலை அறிந்து, தமிழர் புனர்வாழ்வுக் கழகம் முன்னெடுத்திருக்கும் மனிதாபிமான சேவைகளுக்குத் தொடர்ந்தும் ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்கி தாராளமனதுடன் நிதிப்பங்களிப்பால் துயர் துடைக்க முன்வருமாறு பணிவன்புடன் அவுஸ்ரேலிய தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர் வேண்டிக்கொள்கின்றனர்.
கடந்த 22 வருடங்களாக இடம்பெற்ற மனிதாபிமான சேவைகளுக்குத் தொடர்ந்தும் ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்கிய அனைத்து அன்பளிப்பாளர்களுக்கும், ஊடகத்தினருக்கும் புனர்வாழ்வுக் கழகத் தொண்டர்கள் தமது நெஞ்சார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றனர். நன்றி.
அன்புடன்,
ரமேஷ்
(த.பு.கழகம் சார்பில்)
0 comments:
Post a Comment