ஆசிய பசுபிக் சிறுவர்கள் இணைப்புத் திட்டத்தின் கீழ் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் கடந்தாண்டு அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் ஆறுபேர் ஜப்பானுக்கான பயணத்தை இன்று கொள்ளவுள்ளனர்.
கடந்த மூன்று மாதங்களாக இவர்கள் ஜப்பான் மொழியை கொழும்பில் கற்றதுடன் ஜப்பான் நாட்டில் தங்கியிருக்கும் காலத்தில் அந்த நாட்டின் பழக்கவழக்கங்களை அறியவும் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்தில் இருந்து ஒரு மாணவியும் ஏனைய இடங்களைச் சேர்ந்த ஐந்து மாணவ, மாணவிகளுமாக மொத்தம் ஆறு மாணவர்கள் இந்தச் சுற்றுலாவில் இடம் பெற்றுள்ளார்கள்.
இவர்களுடன் முகாமையாளராக ஸ்ரீயாணி ஹேவாஹடம் உதவியாளர்களாக ரி.எம். ரிலக்கமல் முதுஹம டில்சான் ஜெயதிலகவும் செல்லவுள்ளார்கள்.
இந்த அணியில் யாழ்ப்பாணம், உடுவில் மகளிர் கல்லூரியில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்தவரும் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியில் கல்வி கற்பவருமான தாரணி இந்திரன், களுத்துறை முஸ்லிம் பெண்கள் மகாவித்தியாலய பசிதா பாறுக், கொழும்பு றோயல் கல்லூரியைச் சேர்ந்த நவீன் ஆர்.பிறேமரத்தினா, கொழும்பு ஆனந்தாக் கல்லூரியைச் சேர்ந்த சானுஜா எதிரிசிங்கா, காலி மகிந்தா வித்தியாலயத்தைச் சேர்ந்த லகித் நவவோதயா, கொழும்பு விசாக வித்தியாலயத்தைச் சேர்ந்த ஜே. ஜீ.பி.களனி பயிசரா ஆகியோர் இந்த சுற்றுலாவுக்குச் செல்கின்றனர்.
இவர்கள் ஒரு மாத காலம் ஜப்பானில் தங்கி நின்று பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment