Thursday, July 14, 2011

லண்டனில் தேசிய நினைவெழுச்சி நாள் 2011 இற்கான செயற்குழு அறிவிப்பு

லண்டனில் தேசிய நினைவெழுச்சி நாள் 2011 இற்கான செயற்குழு அறிவிப்பு

தேசிய நினைவெழுச்சி நாள் சிறப்புற நடைபெறுவதற்கும், அதனூடாக எமது தாயக அரசியற் செயற்திட்டங்களை முன்னகர்த்துவதற்குமான செயற்குழு பிரித்தானியாவில் அறிவிக்கப்பட்டுள்ளது. வழமைபோல் இவ்வருடமும் EXCEL  (எக்செல்) மண்டபத்தில் தேசிய நினைவெழுச்சி நாள் உணர்வுபூர்வமாக நடைபெறவுள்ளது.

இச்செயற்குழுவானது கடந்த கால செயற்பாடுகளில் பெறப்பட்ட பட்டறிவுகளின் அடிப்படையில் தவறுகள் ஏற்படா வண்ணம் வெளிப்படையாக செயற்படும்.

 
2011 இற்கான தேசிய நினைவெழுச்சி நாளுக்கான செயற்குழு உறுப்பினர்களின் விபரம் வருமாறு:
 
01.  Mrs. சண்முகசுந்தரம் (மாவீரர் குடும்பம்)
02.  Mrs. சதானந்தன் (மாவீரர் குடும்பம்)
03.  Mr. நகுலேசன் (சட்டத்தரணி)
04.  Dr. வசந்தன் (கலாநிதி)
05.  Mr. சுதாகரன் (தேசியச் செயற்பாட்டாளர்)
06.  Mr. ஜெயந்தன் (இளையோர்)
07.  Mr. கபில் கந்தசாமி (இளையோர்)
08.  Ms. அனோஜா (சட்ட ஆலோசகர்)
09.  Mrs. ஜெயா (தேசியச் செயற்பாட்டாளர்)
10.  Mr. கந்ததேவா (தேசியச் செயற்பாட்டாளர்)
11.  Mr. சுகந்தகுமார் (தேசியச் செயற்பாட்டாளர்)
12.  Mr. செந்தில்நாதன் கந்தையா (தேசியச் செயற்பாட்டாளர்) 

மேற்குறிப்பிடப் பட்டவர்கள் கடந்த கால தேசிய செயற்பாட்டினூடாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். இதில் பொருத்தமான மூவர் நிதிச்செயற்பாட்டுக்கென தெரிவு செய்யப்பட்டு நிதிச்செயற்பாடுகள் யாவும் வெளிப்படையாக நடைபெறும். மேலும் நிதிச்செயற்பாடுகள் யாவும் தகமையுள்ள கணக்காளர்களினால் அறிக்கையாக்கப்பட்டு குறிப்பிட்ட நாட்களுக்குள் பொதுமக்களின் பார்வைக்கு வழங்கப்படும்.

இதே போல் இச்செயற்குழுவிலிருந்து ஊடக சந்திப்புக்கென ஊடக ஒருங்கிணைப்புக் குழு உருவாக்கப்பட்டு, செயற்பாடுகள் யாவும் அவ்வப்போது பொதுமக்களுக்கு தெரியப்படுத்தப்படும். இதே போல் ஒவ்வொரு செயற்பாடுகளும் குழு ரீதியாக மக்களின் கருத்துக்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வெளிப்படையாக நடைபெறும்.

எனவே தேவையற்ற விசமத்தனமான கருத்துக்களை புறம்தள்ளி, இச்செயற்குழு ஊடாக நடைபெறும் தேசிய நினைவெழுச்சி நாள் மூலம் மாவீரச்செல்வங்களை  வணங்குவதன் ஊடாகவும், அதன் மூலம் பெறப்படும் நிதியில் மீதமுள்ள பணத்தை எமது தாயக மக்களின் நல்வாழ்வுக்காகவும், தாயக விடுதலைக்கான அரசியற் செயற்பாடுகளுக்கும், வெளிப்படையாக பயன்படுத்தப்படும்.

0 comments:

Post a Comment