Thursday, July 14, 2011

சீன நிறுவனம் ஒப்பந்தத்தை மீறியது - ஹர்ஷத சில்வா

சட்டவிரோத உடன்படிக்கை ஒன்றின் மூலம் அரசு எவ்வாறு காலி முகத்திடல் பகுதியில் 10 ஏக்கர் நிலப்பரப்பினை சீனா அமைப்புக்கு விற்பனை செய்தது என ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷத சில்வா கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும், அரசு இவ்வாறு 20 ஏக்கர் நிலப்பரப்பினை காலி முகத்திடல் பகுதியில் விற்பனை செய்வதற்கு தீர்மானித்து அவற்றில் 10 ஏக்கர் நிலப்பரப்பினை ஷங்கரி லா நிறுவனத்துக்கு விற்றமை தொடர்பில் எதுவித பிரச்சினைகளும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஷங்கரி லா நிறுவனத்தினதும் கத்திக் நிறுவனத்துனடைய கொடுப்பனவுகள் ஒரே நேரத்தில் இடம்பெற்றதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஷபக்ஷ் தெரிவித்ததில் எதுவித உண்மைகளும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு நிதி அமைச்சுக்கும் கத்திக் நிறுவனத்துக்கும் இடையில் பெப்ரவரி 15 திகதி கையொப்பம் இடம்பெற்ற உடன்படிக்கையில் காலி முகத்திடல் நிலப்பரப்பில் 10 ஏக்கர் நில விற்பனை கொடுப்பனவுக்கான முற்பணம் 50 மில்லியன் டொலர் பெப்ரவரி 28ம் திகதிக்கு முதல் வழங்ப்பட வேண்டும் எனவும் மிகுதி 86 மில்லியன் டொலர்கள் ஏப்ரல் 21ம் திகதிக்கு முன்னர் வங்கியில் வைப்பிலிட்டு உறுதி வழங்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், அவ்வாறு குறித்த திகதியில் கொடுப்பனவுகளை கொடுக்கத் தவறினால் உரிமையயை மீளப்பெற்று ஒப்பந்தம் இரத்து செய்யப்படும் என குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இது தொடர்பாக ஜூன் 22ம் திகதி பிரதி அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன பாராளுமன்றத்தில் சமர்பித்த ஆவணத்தில் 54.4 மில்லியன் டொலர்களே கொடுப்பனவு செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டதாக அவர் கூறினார்.

எப்படியிருப்பினும் ஒப்பந்தத்தை மீறிச் செயற்படும் குறித்த சீன நிறுவனத்துக்கு எவ்வாறு 10 ஏக்கர் நிலத்தினை விற்க முடியும் என ஹர்ஷத சில்வா கேள்வியெழுப்பியுள்ளார்.

0 comments:

Post a Comment