Friday, July 15, 2011

இலங்கை வீரர்கள் மீதான தாக்குதல் - மேலும் மூவருக்குப் பிணை

இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது தாக்குதல் நடத்தினர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மேலும் மூவருக்கு லாகூர் தீவிரவாத எதிர்ப்பு நீதிமன்றம் பிணை வழங்க அனுமதியளித்துள்ளது.

மாலிக் அப்துல் ரகுமான், ஜவீட் அன்வர், உபைதுல்லா ஆகியோருக்கே இவ்வாறு பிணை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் இவர்கள் மீது சுமத்தப்பட்டுவந்த குற்றம் அரச தரப்பினரால் சரிவர நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இலங்கை அணி வீரர்கள் சென்ற பஸ் தாக்குதலுக்கு திட்டமிட்ட பிரதான சூத்திரதாரி என சந்தேகிக்கப்பட்ட பாகிஸ்தானின் லஷ்கர்-இ-ஜஹாங்வி என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவரான மாலிக் ஷா இஷாக்கை 14 ஆண்டுகள் சிறை வாசத்திற்கு பின் அந்நாட்டு உச்சநீதிமன்றம் பிணையில் விடுதலை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment