Friday, July 15, 2011

ஒகஸ்ட் 13, 14ம் திகதிகளில் அனைத்து சரணாலயங்களையும் மூடத் தீர்மானம்

யானைகளைக் கொண்ட இலங்கையின் தேசிய சரணாலயங்கள் அனைத்தும் எதிர்வரும் ஒகஸ்ட் 13, 14ம் திகதிகளில் மூடப்படவிருப்பதாக விவசாய மற்றும் வனவிலங்குகள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.

முதல் தடவையாக யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் இன்று குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி வில்பத்து, யால, வஸ்கமுவ, உடவலவ உள்ளிட்ட 22 சரணாலயங்கள் எதிர்வரும் மாதம் 13, 14ம் திகதிகளில் மூடப்படவுள்ளன.

யானைகள் கணக்கெடுப்பின் பின்னர் அது குறித்த தகவல்கள் வெளியிடப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 5 ஆயிரம் தொடக்கம் 6 ஆயிரம் வரையிலான யானைகள் இருப்பதாக தற்போதைய தற்காலிக கணிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

0 comments:

Post a Comment