Friday, July 15, 2011

படங்கள் தோல்வி: இலியானா சம்பளம் 1 கோடியாக குறைப்பு

படங்கள் தோல்வி: இலியானா சம்பளம் 1 கோடியாக குறைப்பு

பிரபல தெலுங்கு நடிகை இலியானா. இந்தியில் இருந்து தமிழில் ரீ மேக் ஆகும் 3 இடியட்ஸ் படத்தில் விஜய்யுடன் நடித்து வருகிறார்.

 
இலியானாவின் தெலுங்கு படங்கள் வெற்றிகரமாக ஓடியதால் சம்பளத்தை பெருமளவு உயர்த்தினார். ரூ.1 கோடி வாங்கி வந்த அவர் ரூ.1 1/2 கோடியாக்கினார்.
 
தற்போது அல்லு அர்ஜுனுடன் தெலுங்கு பட மொன்றில் நடிக்க ரூ.2 கோடி கேட்டார். இது தெலுங்கு பட உலகினரை அதிர்ச்சியடையச் செய்தது. எந்த நடிகையும் இவ்வளவு சம்பளம் வாங்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  
 
இதனால் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களின் புதுப் படங்களில் இலியானாவை ஒப்பந்தம் செய்ய தயங்கினர். இவருக்கு வரவேண்டிய பெரிய பட்ஜெட் படங்கள் வேறு நடிகைகள் கைக்கு மாறியது.
 
இதனால் அதிர்ச்சியான இலியானா சம்பளத்தை ரூ.1 கோடியாக திடீரென குறைத்துள்ளார். சம்பள பிரச்சினையால் இழந்த படங்களையும் மீண்டும் கைப்பற்ற முயற்சிக்கிறார்

0 comments:

Post a Comment