யாழ்ப்பாணம் சுண்டிக்குளிப் பகுதியைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர் தீயில் எரிந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் மற்றொருவர் படுகாயம் அடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இன்று பிற்பகல் 3.30 மணியளவில் சுண்டிக்குளிப் பகுதியில் இருந்து இவர்கள் இருவரும் எரிந்த நிலையில் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர்களில் மிகமோசமாக எரிந்த நிலையில் காணப்பட்ட பெண் உயிரிழந்ததாகவும் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
28 வயதுடைய அகிலா என்ற குறித்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் உள்ளதாகவும், பெண்ணின் காதலான மற்றைய நபருக்கும் இடையிலான வாக்குவாதத்தின் இறுதியில் அந்தப் பெண் கத்தியால் வெட்டப்பட்டே எரிக்கப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவத்தில் படுகாயம் அடைந்தவர் தென்னிலங்கையினைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் குறித்து யாழ்.பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
0 comments:
Post a Comment