செங்கலடி பதுளை வீதியில் தம்மானம்வெளிப் பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலியானதுடன் சாரதி காயமடைந்துள்ளார்
குறித்த சம்பவத்தில் பன்குடாவெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் பணியாற்றும் 45 வயதுடைய வே.கோவிந்தராஜா என்ற ஆசிரியரே பலியானவரென இனங்காணப்பட்டுள்ளதாக கரடியனாறுப் பொலிஸார் தெரிவித்தனர்.
கனரக வாகனத்தின் சாரதி படுகாயமடைந்த நிலையில் செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தம்மானம் வெளியில் வீதியோரத்தில் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் இருந்து கதைத்துக்கொண்டு நின்ற வேளையில் எதிரே வேகமாக வந்த கனரக வாகனம் கட்டுபாட்டை இழந்து ஆசிரியர் மீது மோதி வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் செங்கலடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment