வடக்கில் தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிக்கவென மனித உரிமை அமைப்புக்கள் அங்கு செல்ல வேண்டும் என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் தெரிவித்துள்ளது.
அவ்வாறு குழுவை அனுப்பும் பட்சத்தில் அம்மக்களின் அரசியல், ஜனநாயக உரிமையை உறுதிப்படுத்த முடியுமென அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் :-
சட்டவிரோத பிரச்சார நடவடிக்கைகள் குறித்து தேர்தல் ஆணையாளர் எடுக்கும் நடவடிக்கைகள் திருப்திகரமானதாக இல்லை. 50ற்கும் மேற்பட்டவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஆனால் சட்டவிரோத பிரச்சாரங்கள் தொடர்பில் அவர்களுடைய செயற்பாடுகளில் பிரச்சினை உள்ளது.
சட்டவிரோத பிரச்சாரங்களை அகற்ற அவர்கள் முயற்சி எடுப்பதாகத் தெரியவில்லை. இதுவரையில் 43 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. நாங்கள் இன்று மனித உரிமைகள் ஆணையகத்தில் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளோம்.
வடக்கின் நிலைமைகளை கருத்திற் கொண்டு அங்குள்ள உண்மை நிலைகளை கண்டறிந்து மத்தியஸ்த்தம் வகிக்கவென அவர்களுடைய விசேட குழுவை யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளோம்.
மக்களின் நம்பிக்கை அரசியல் கட்சிகளின் நம்பிக்கை என்பவற்றை உறுதிப்படுத்த இவ்வாறான விடயங்கள் அவசியம், என்றார்.
0 comments:
Post a Comment