Friday, July 15, 2011

(2ஆம் இணைப்பு) பஸ் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை உயர்வு

கண்டி கொழும்பு பிரதான வீதியின் கிரிபத்கும்புர பிரதேசத்தில் இன்று காலை 6.45 மணியளவில் இரு பஸ்கள் மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3ஆக உயர்வடைந்துள்ளது.

விபத்தில் இரு பெண்களும் ஒரு ஆணும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

மேலும் விபத்தில் 18 பேர் படுகாயமடைந்துள்ளதோடு அவர்கள் சிகிச்சைகளுக்கென பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாத்தளையிலிருந்து கொழும்பு நோக்கி வந்த பயணிகள் பஸ்ஸும் ஹெம்மாத்தகம பிரதேசத்தில் இருந்து காமன்ட் தொழிலாளிகளை ஏற்றிவந்த பஸ்ஸும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இவ்விபத்து சம்பவித்துள்ளது.

0 comments:

Post a Comment