Friday, July 15, 2011

நிறைவேறாமல் போன கார்த்திக்கின் ஆசை!

Friday, Jul 15, 2011நவரச நாயகன் கார்த்திக் தனது மகனான கௌதமை மணிரத்னம் இயக்கத்தில் கதாநாயகனாக அறிமுகம் செய்ய வேண்டும் என்று கடந்த சில வருடங்களாக காத்திருந்தார். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த கார்த்திக் தனது எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போனதால் வேறு முடிவை எடுத்திருக்கிறார்.

மணிரத்னத்திடம் வேலையாகமல் போனதால், நல்ல கதைகளை வைத்திருக்கும் வேறு இயக்குனர்களை தேட ஆரம்பித்து இருக்கிறார் கார்த்திக்.

தனக்கு ஒரு பாரதிராஜா கிடைத்த மாதிரி, தனது மகனுக்கும் ஒரு அற்புதமான இயக்குனர் கிடைப்பார் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் கார்த்திக். அதே நம்பிக்கையுடன் அவரது மகனும் காத்திருக்கிறார்.

0 comments:

Post a Comment