நயன்தாராவுடன் விரைவில் திருமணம்: குருவாயூர் கோவிலில் பிரபுதேவா காணிக்கை
நடிகர் பிரபுதேவா காதலி நயன்தாராவுடன் கேரளாவில் தங்கி திருமண ஏற்பாடுகளில் தீவிரம் காட்டி வருகிறார். இதற்கிடையே, நேற்று பிரபுதேவா நயன் தாராவுடன் குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு வந்தார். நயன்தாரா கிறிஸ்தவர் என்பதால் அவர் காரிலேயே அமர்ந்து கொண்டார்.
பிரபுதேவா தனது கார் டிரைவருடன் கோவிலுக்குள் சென்று 15 நிமிடங்கள் கிருஷ்ணனை வழிபட்டார். பின்னர் தங்க பட்டுச்சேலையில் தாலியை பொதிந்து வைத்து மேல்சாந்தியிடம் காணிக்கையாக கொடுத்து வழிபட்டார். அதோடு, கதலி வாழைக் குலை மற்றும் ஒரு கட்டு பணம் மற்றும் சந்தனம், நல்லெண்ணெய் ஆகியவற்றையும் காணிக்கையாக வழங்கினார்.
பிரபுதேவா கோவிலுக்கு வந்துள்ளார் என்பதை அறிந்த ரசிகர்கள் அவரைக் காண அங்கு திரண்டனர். இதனால் பிரபுதேவா அங்கிருந்து அவசர, அவசரமாக கிளம்பினார். பின்னர் நயன்தாராவுக்கு சொந்தமான அரியானூர் சாந்திமடம் பகுதியில் உள்ள பண்ணைத் தோட்டத்திற்கு சென்றனர்.
0 comments:
Post a Comment