லஷ்கர் இ ஜங்வி பயங்கரவாத தலைவர் விடுதலை; பாக்.,கில் ஆயுத படைசூழ ரோஜா மலர் தூவி வரவேற்பு
பயங்கரவாதம், சதிச்செயல், மற்றும் கொலை என 44 வழக்குகளில் தொடர்புடைய தடை செய்யப்பட்ட அமைப்பான லஷ்கர் இ ஜங்வி பயங்கரவாத தலைவர் மாலிக்முகம்மது ஈசாக் 14 ஆண்டுகளுக்கு பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.
இவரை வரவேற்க பாகிஸ்தான் கோட்லாபாத் ஜெயிலில் ஆயுத படைபரிவாரங்களுடன் உள்ளூர் மத தலைவர்கள் மற்றும் பலர் வரவேற்றனர் என்பதுதான் கூடுதல் ஹைலைட்.
பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் லஷ்கர் இ ஜங்வி தலைவராக இருந்து வருபவர் மாலிக்முகம்மது ஈசாக் .இவர் பாகிஸ்தானில் பல்வேறு தீவிரவாத செயல்களில் தொடர்புடையவர். 1997 முதல் இவர் மீது 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதனால் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். இவர் பாக்., சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்திருந்தார். இந்த விசாரணையில் இவர் மீதான 34 வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என இவரது மீதான வழக்குள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் இவரை ஜாமீனில் விடலாம் என கோர்ட் உத்தரவிட்டது. இதன்படி இவர் நேற்று விடுதலையானார்.
இவரை வரவேற்க பாகிஸ்தானில் உள்ள ஏ.எஸ்.வால்ஜமாத் தலைவர் முகம்மது அகம்மது லூதியான்வி ஆயுத படைபரிவாரங்களுடன் வந்திருந்தார். ஜெயில் வாசலில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் கூடி நின்ற ஆதரவாளர்கள் ரோஜாமலர் தூவி வரவேற்பு அளித்து அவருக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பினர். பல கார்களில் அணிவகுத்து வந்த அவரை ஊர்வலமாக அழைத்து சென்றனர். வழிநெடுகிலும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
ஜெயிலில் இருந்து வெளியே வந்த மாலிக் ஈசாக் கூறுகையில் ; தம்மை பயங்கரவாத செயல்களுடன் தொடர்பு இல்லாதவன் என கோர்ட் ஏற்றுக்கொண்டது தமக்கு திருப்தி அளிப்பதாக கூறினார். அவர் மேலும் கூறுகையில்; ஒருங்கிணைந்த பாகிஸ்தானுக்கு தான் என்னவேண்டுமானாலும் செய்வேன், பாகிஸ்தானுக்காக தொடர்ந்து போராடுவேன் என்றார்.
இலங்கை வீரர்கள் மீதான தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர்: சமீபத்தில் 2009 ம் ஆண்டில் இலங்கை வீரர்கள் பாகிஸ்தான் சென்றிருந்த போது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்திற்கு மாலிக் ஈசாக் ஜெயிலில் இருந்து மூளையாக செயல்பட்டான் என்ற குற்றச்சாட்டும் நிலுவையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment