Friday, July 15, 2011

ஹீரோயின் இல்லாத ஹீரோயின்: புலம்பும் மதுர் பண்டார்கர்

தனது படம் ஹீரோயினுக்கு இன்னும் எந்த ஹீரோயினையும் ஒப்பந்தம் செய்யவில்லை என்று இயக்குனர் மதுர் பண்டார்கர் தெரிவித்துள்ளார்.

மதுர் பண்டார்கர் 'ஹீரோயின்' என்ற படத்தை இயக்க முடிவு செய்து அதற்காக ஐஸ்வர்யா ராயை ஒப்பந்தம் செய்தார். ஒப்பந்தம் சில நாட்களிலேயே அமிதாப் தனது மருமகள் ஐஸ்வர்யா கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்தார்.

இந்த செய்தியைக் கேட்டு அனைவரும் சந்தோஷப்பட இயக்குனர் மதுர் பண்டார்கருக்கு மட்டும் தலையில் இடி விழுந்தது போலாகிவிட்டது. படத்திற்கு ஒப்பந்தம் செய்தபோது தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை ஐஸ்வர்யா மறைத்துவி்ட்டார் என்று வருத்தப்பட்டார்.

ஹீரோயின் திரைக்கு வரும் முன்பே பரணுக்கு சென்றுவிட்டது. இந்நிலையில் மதுர் பண்டார்கர் தனது படத்தை தூசி தட்டி எடுத்து அதில் நடிக்க கதாநாயகியைத் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார் என்று செய்திகள் வந்தன. இதற்காக கரீனா கபூர் அல்லது பிரயங்கா சோப்ராவை அணுகக்கூடும் என்றும் கூறப்பட்டது.

நான் ஹீரோயின் படத்திற்காக புது கதாநாயகியைத் தேடுவதாக வரும் தகவல்கள் ஆதாரமற்றவை என்று அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.Topics: ஹீரோயின், மாதுர் பண்டார்கர், madhur bhandarkar, heroine, bollywood

0 comments:

Post a Comment