Friday, July 15, 2011

பெருந்தோட்டங்களில் நிலவும் குறைப்பாடுகளுக்கு நிர்வாகமே பொறுப்பு - யோகா

இலங்கை பெருந்தோட்டங்களில் தொழிலாளர்களின் உற்பத்தித்திறன் குறைந்திருக்கிறது என்று கூறியுள்ள இலங்கை பேருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் அதனால் நீண்ட காலத்தில் தோட்டங்களுக்கு பெரும் நட்டம் ஏற்படும் என்று கூறியிருக்கிறது.

குறிப்பாக இலங்கையின் தேயிலையின் மதிப்பு சர்வதேச சந்தையில் குறைந்திருப்பதாகவும், ஏனைய தேயிலை உற்பத்தி நாடுகளான இந்தியா மற்றும் கென்யாவை விட இலங்கையில் தொழிலாளர்களின் உற்பத்தித்திறன் மிகவும் பிந்தங்கிய நிலையில் காணப்படுவதாகவும் முதலாளிமார் சம்மேளன பிரதிநிதிகள் இரு தினங்களுக்கு முன்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கொழும்பில் தெரிவித்திருக்கிறார்கள்.

ஆனால் இலங்கை பெருந்தோட்ட உற்பத்தித்திறன் குறைவுக்கு தோட்டத்தொழிலாளர்களை காரணமாகக் கூற முடியாது என்று கூறுகின்ற இலங்கை பாராளுமன்ற உறுப்பினரான ஆர். யோகராஜன், முதலீடு போதாமையும், உரிய விவசாய யுக்திகள் பயன்படுத்தப்படாமையுமே அதற்கு முக்கிய காரணம் என்று கூறுகிறார்.

அத்துடன் பெரிய கம்பெனிகளின் தோட்டங்களில் மறு நடுகை போன்ற யுக்திகள் பயன்படுத்தப்படாததால் அங்கு உற்பத்தித்திறன் குறைந்திருக்கும் அதேநேரம், தென் பகுதியைச் சேர்ந்த தனியாருக்குச் சொந்தமான சிறு தோட்டங்களில் இந்த யுக்திகள் சரியாக பயன்படுத்தப்படுவதால் அவை உற்பத்தித்திறனில் இரு மடங்கு அதிகரிப்பைக் காட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை தேயிலையின் மதிப்பு சர்வதேச சந்தையில் குறைந்திருப்பதாகக் கூறப்படுவதையும் அவர் மறுத்துள்ளார்.

0 comments:

Post a Comment