திறன்மிகு வீரர்களை தெரிவுசெய்து அவர்களை தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் போட்டிகளில் பங்குபற்றச்செய்யும் வகையில் நாடாளவிய ரீதியில் நடைபெற்று வரும் கிரிடா சக்தி விளையாட்டு பயிற்சி முகாம் இன்றுகாலை கிளிநொச்சி பொது மைதானத்தில் சிறப்பாக ஆரம்பமாகியது.
இந் நிகழ்வை விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே ஆரம்பித்து வைத்ததோடு ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார், பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ், றொஹான் ரத்வத்த ஆகியோர் சிறப்பு அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
15ம் 16ம் ஆகிய இரு தினங்கள் நடைபெறும் இப்பயிற்சியானது ஒவ்வொரு விளையாட்டுகளிலும் நிபுணத்துவம் வாய்ந்த சிறப்பு பயிற்றுவிப்பாளர்களால் பயிற்றுவிக்கப்பட்டு தெரிவுசெய்யப்படும் திறன் மிகு வீரர்கள் தேசிய ரீதியிலான பயிற்சிக்கு அழைத்துச் செல்லப்படுவதோடு அவர்களுக்கு ஊக்குவிப்பு தொகையும் வழங்கப்படவுள்ளது.
இந் நிகழ்வில் விளையாட்டுத்துறை திணைக்களத்தின் பணிப்பாளர் ரஞ்சனி ஜெயக்கொடி, வட மாகாண விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் அண்ணாத்துறை, கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரச அதிபர் சீனிவாசன், விளையாட்டு உத்தியோகத்தர்கள், விளையாட்டு வீரர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment