Friday, July 15, 2011

விவகாரத்து செய்யவில்லை, ஒன்னாத் தான் இருக்கோம்: பூமிகா

தனக்கும், தனது கணவருக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை என்றும், ஒன்றாகத் தான் இருப்பதாகவும் நடிகை பூமிகா தெரிவித்துள்ளார்.

நடிகை பூமிகா, யோகா பயிற்சியாளர் பரத் தாகூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும், அதற்காக பூமிகா மும்பை நீதிமன்றத்தில் விவகாரத்து கேட்டு மனு தாக்கல் செய்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

குறிப்பாக பரத் தாகூர் படம் ஒன்றை எடுத்து நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பூமிகா கடுப்பாகியுள்ளதாகவும் பேசப்பட்டது.

இதைப் பார்த்து பூமிகா அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த செய்திகள் எல்லாம் வெறும் வதந்தி என்று கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

எனக்கும், எனது கணவருக்கும் இடையே எந்த கருத்துவேறுபாடும் இல்லை. நாங்கள் ஒன்றாகத் தான் இருக்கிறோம். நாங்கள் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்வதாக வதந்திகள் வந்த வண்ணம் உள்ளன. இதை நான் பலமுறை மறுத்துள்ளேன். ஆனாலும் வதந்திகள் நின்றபாடில்லை. இந்த வதந்திகளை நம்பாதீர்கள் என்றார்.Topics: பூமிகா, bharath thakur, பரத் தாகூர், விவாகரத்து, bhumika

0 comments:

Post a Comment