வொஷிங்டன் டீ.சி பிரதேசத்தில் அமெரிக்க கொள்கைகளை வகுப்பவர்களுக்கும், செனட்டர்களுக்கும் மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கும் சனல் 4வின் இலங்கையின் கொலைக்களங்கள் என்ற ஆவணப்படத்தை காட்சிப்படுத்த பல்வேறு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் திட்டமிட்டுள்ளது.
ஜூன் மாதம் பிரித்தானிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ஆவணப்படத்தை பார்வையிட்டு அதுதொடர்பில் கலந்துரையாடுவதற்கான விரிவான ஏற்பாடுகள் வொஷிங்டன் டீ.சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜெனீவா மற்றும் நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் குறித்த ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டு, சர்வதேச விசாரணைகளுக்கு வலியுறுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஜிம் மக்கோவன் மற்றும் மனித உரிமைகள் அமைப்பு உதவித் தலைவர் ரொம் லன்டோஸ் ஆகியோர் ஆவணப்படம் ஒளிபரப்பப்பட முன்னர் விளக்கவுரை வழங்கவுள்ளனர் என சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
0 comments:
Post a Comment