தன் கீழுள்ள இராணுவத்தினரை கட்டுப்படுத்த தெரியாதவர், எம்மீது மேற்கொண்ட தாக்குதலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தெரியாதவர், அரசியல் கட்சிகள் தொடர்பில் விமர்சனம் செய்வது நல்லதல்ல என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் :-
யாழ்ப்பாண கட்டளைத்தளபதி நேற்றைய தினம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் அரசியல் இலாபத்துக்காக இராணுவத்தினருக்கு எதிராக குற்றம் சுமத்துவதாக தெரிவித்துள்ளார். அவர் இவ்வாறு தெரிவித்துள்ளமையானது அவர் அரசியலில் தேவையின்றி தலையிடும் ஒரு காரியம் எனவும் அவருகென்று ஒரு தொழில் உள்ளது, அதை மாத்திரம் செய்துகொண்டிக்க அவருக்கு தெரிய வேண்டும்.
அளவெட்டியிலே எங்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல் இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல், அதை இராணுவத்தினரேதான் செய்ததாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளரே ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தன் கீழுள்ள இராணுவத்தினரை கட்டுப்படுத்த தெரியாதவர், எம்மீது மேற்கொண்ட தாக்குதலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தெரியாதவர், அரசியல் கட்சிகள் தொடர்பில் விமர்சனம் செய்வது நல்லதல்ல.
0 comments:
Post a Comment