சென்னை: சென்னை கோயம்பேட்டில் உள்ள தெலுங்கு நடிகை விஜயசாந்திக்குச் சொந்தமான நிலத்தை அபகரித்ததாக தமிழக முன்னாள் எம்.பி. ஒருவரின் தம்பியை போலீஸார் கைது செய்துள்ளனர்.
5.15 ஏக்கர் பரப்பளவிலான இந்த நிலம் விஜயசாந்தி உள்ளிட்ட 8 பேருக்குச் சொந்தமானதாகும். இதன் மதிப்பு ரூ. 130 கோடி என்கிறார்கள். இந்த நிலத்தை போலியான ஆவணங்களைத் தயாரித்து கடந்த 2008ம் ஆண்டு வெறும் ரூ. 8 கோடிக்கு விற்றுள்ளனர்.
இதுகுறித்து ஏற்கனவே போலீஸில் புகார் தரப்பட்டது. அதன் பேரில் மத்திய குற்றப் பிரிவு போலீஸார் 3 பெண்கள் உள்பட நான்கு பேரை கைது செய்துள்ளனர். இந்த நிலையில் தற்போது அதே நிலத்தை 70 கோடி ரூபாய்க்கு சிலர் விலை பேசி வருவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக புகாரும் வந்தது.
இதையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இறுதியில் வில்வமணி என்ற புரோக்கர் கைது செய்யப்பட்டார். இவர் முன்னாள் எம்.பி. ஒருவரின் தம்பியாவார். அந்த முன்னாள் எம்.பி. யார் என்பதை போலீஸார் தெரிவிக்கவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.Topics: விஜயசாந்தி, நில அபகரிப்பு, vijayashanthi, land grabbing
0 comments:
Post a Comment