Friday, July 15, 2011

இன்று திரைக்கு வந்த படங்கள் ஒரு பார்வை

Friday, Jul 15, 2011இன்று முதல் விக்ரமின் தெய்வத்திருமகள், ஹாலிவுட் படமான ‘ஹாரிபாட்டரும் உயிர் ரகசியமும்’, அமலா பால் நடித்துள்ள ‘சிந்து’ ஆகிய மூன்று படங்கள் திரைக்கு வருகின்றன. இப்படங்களைப் பற்றிய சிறு அறிமுகத்தினை உங்களுக்காக பிலிமிக்ஸ் இணையதளம் வழங்குகிறது.

தெய்வத் திருமகள்

‘மதராசபட்டினம்’ விஜய் இயக்கும் படம் ‘தெய்வத் திருமகள்’ சீயான் விக்ரம் இப்படத்தில் 5 வயது சிறுவனின் மன நிலையைக் கொண்டவராக நடிக்கிறார். அனுஷ்கா, அமலா பால் என இரண்டு கதாநாயகிகள். 5 வயதே உடையே சாரா என்ற சிறுமி முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறாள். காமெடிக்கு சந்தானம் இருக்கிறார்.

நீரவ் ஷா ஒளிப்பதிவு பணியை கவனித்துக் கொள்ள, படத்தொகுப்பினை ஆண்டனி செய்திருக்கிறார். இத்திரைப்படத்தின் பாடல்கள் நா.முத்துக் குமாரின் பேனாக்களால் வரையப்பட, ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

ராஜகாளியம்மன் பிலிம்ஸ் சார்பில் மோகன் நடராஜன் தயாரித்துள்ள இப்படத்தை, யு டிவி மோஷன் பிக்சர்ஸ் இன்று முதல் வெளியிடுகிறது.

ஹாரிபாட்டரும் உயிர் ரகசியமும்

உலகளவில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திழுத்த படம் எதுவென்றால் அது ஹாரிபாட்டர் படமாகத்தான் இருக்கும். ஹாரிபாட்டர் பட வரிசையில் ஏழு படங்கள் வந்திருக்கின்றன. தற்போது இப்படவரிசையின் எட்டாம் பாகம் மற்றும் கடைசி பாகமான ‘ஹாரிபாட்டரும் உயிர் ரகசியமும்’ என்ற பெயரில் இன்று முதல் திரைக்கு வருக்கிறது.

இந்த கதையின் கடைசி பாகம் பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. தன் தாய், தந்தையரை கொன்ற வில்லன் வால்டர் மோர்ட்டை பழி வாங்க புறப்பட்ட ஹாரிபாட்டரையும், அவனது நண்பர்களையும் தனது மாயாஜால வித்தைகளால் முறியடிக்கிறான் வால்டர்.

தொடர்ந்து போராடும் ஹாரிபாட்டருக்கு பெரும் இழப்புகள் ஏற்படுகிறது. இருந்தும், ஹாரிபாட்டர் தன்னம்பிக்கையோடு வால்டரை எதிர்த்து போராடுகிறான். ஆனால் வால்டருக்கு அதீத சக்திகள் அதிகரித்து பெரும் பலம் பெறுகிறான்.

வால்டரின் கையில் உள்ள மந்திரக் கோலால் மட்டுமே அவனை கொல்ல முடியும் என்பதை தெரிந்து கொண்ட ஹாரிபாட்டர், அந்த மந்திரக் கோலை எப்படி அவனிடமிருந்து எடுக்கிறான். அதை வைத்து எப்படி அவனை அழிக்கிறான் என்பதை விறுவிறுப்பான திரைக்கதையின் மூலம் சொல்லுகிறது இந்த கடைசி பாகம். இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தமிழில் டப் செய்து வெளியிடுகிறது.

சிந்து

‘உயிர்’ என்ற சர்ச்சைக்குரிய படத்தை இயக்கியவர் சாமி. இவர் நடிகை அமலா பாலை முதன் முதலில் தமிழில் அறிமுகப் படுத்திய படம் ‘சிந்து சமவெளி’. இப்படத்தில் மாமனாருக்கும், மருமகளான அமலா பாலிற்கும் இடையே ஏற்படும் தவறான உறவை சித்தரிக்கும் கதையாக அமைக்கப்பட்டிருந்தது.

சில வருடங்களுக்கு முன்பு இப்படம் வெளியான போது அமலா பாலை யாருக்கும் தெரியாது. தற்போது மைனா, தெய்வத்திருமகள் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானதால், இப்படத்தை ‘சிந்து’ என்ற பெயரில் ரீ ரிலீஸ் செய்கிறார்கள்.

இப்படத்தில் அமலா பாலின் கவர்ச்சியான நடிப்பு ரசிகர்களை கவர்ந்திழுக்கும் என்பதால் இப்படத்தை இன்று முதல் ரீ ரிலீஸ் செய்கிறார்கள். இப்படத்திற்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ் தந்திருக்கிறது

0 comments:

Post a Comment