மனைவி ரம்லத்துக்கு தருவதாகக் கூறிய சொத்துக்களை இன்னும் பிரபுதேவா மாற்றிக் கொடுக்காததாலேயே வழக்கு தாமதமாவதாக தெரியவந்துள்ளது.
சென்னை குடும்ப நல கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்த பிரபுதேவா-ரம்லத் விவாகரத்து வழக்கில் இருவருமே நேற்று ஆஜராகவில்லை. இதற்குப் பின்னணியில் பரபரப்பான காரணங்கள் சொல்லப்படுகின்றன.
பிரபுதேவாவும், நயன்தாராவும் கடந்த வருடம் இறுதியில் திருமணத்துக்கு தயாரானதும் ரம்லத்துதான் கோர்ட்டுக்கு போனார். நயன்தாரா கணவரை பிரிக்க முயற்சிப்பதாகவும் பிரபுதேவாவை மீட்டு தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
பின்னர் பிரபுதேவா- ரம்லத் இடையே சமரசம் ஏற்பட்டது. இருவரும் மனம் ஒத்து பிரிவதாக மனுதாக்கல் செய்தனர்.
அப்போது கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீடு, அண்ணா நகரில் உள்ள வீடு மற்றும் ஐதராபாத்தில் உள்ள பிளாட்கள் போன்றவற்றை மனைவி மற்றும் மகன்களுக்கு வழங்குவதாக பிரபுதேவா உறுதி அளித்தார். ஜூன் 30-ந்தேதிக்குள் பத்திரப்பதிவு செய்யப்படும் என்று கூறப்பட்டது.
ஆனால் இன்னும் சொத்து பத்திரங்கள் ரம்லத் வசம் வரவில்லை என்று கூறப்படுகிறது.
வருகிற 10-ந்தேதி வழக்கு விசாரணையின்போது ரம்லத் மற்றும் குழந்தைகள் பெயரில் ஏற்கனவே குறிப்பிட்டப்படி சொத்துக்கள் பத்திரப்பதிவு செய்யப்பட்டு விட்டதா? என்ற தகவல் பிரபுதேவா தரப்பில் தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகே இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும்.Topics: ரம்லத், பிரபுதேவா, விவாகரத்து, ramlath, prabhu deva, divorce
0 comments:
Post a Comment