Tuesday, July 12, 2011

இ.பெ.கூ மேன்முறையீடு செய்ய அனுமதி

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் சுமார் 162 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் அதற்கான வட்டியுடன் சேர்த்து ஸ்டான்டர்ட் சார்டர்ட் வங்கிக்கு வழங்க வேண்டும் என லண்டன் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு மேன்முறையீடு செய்வதற்கான அனுமதியை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் பெற்றுள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், ஸ்டான்டர்ட் சார்டர்ட் வங்கிக்கு 162 மில்லியன் டொலர்கள் மற்றும் அதற்குரிய வட்டியையும் செலுத்தவேண்டும் என்று லண்டன் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது.

எரிபொருள் கொள்வனவு மற்றும் விலைகளை கட்டுப்படுத்தல் தொடர்பில் இலங்கை அரசாங்கமும் வெளிநாட்டு வங்கிகளும் செய்துகொண்ட ஹெட்ஜிங் உடன்படிக்கையின்படியே இந்த உத்தரவு நேற்றைய தினம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment