இந்த வருடத்திற்குள் இலங்கை மின்சார சபைக்கு 16 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நட்டத்தை எதிர்பார்க்க முடியுமென மின் வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களாக இடம்பெற்ற மின்வெட்டு காரணமாக இந்த நட்டம் மேலும் அதிகரிக்கக் கூடுமென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர், மின்வெட்டு அமுல்படுத்தப்படாவிட்டாலும் அவசர நேரங்களில் மின் துண்டிக்கப்பட்டதாக தெரிவித்த அவர், நீண்ட நேர மின் துண்டிப்பு இல்லாததால் அது குறித்து மக்களுக்கு அறிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
எனினும் தற்போது மின் தடை ஏற்படுத்தப்படுவதில்லை எனவும் அவ்வாறு மின் தடை ஏற்படுத்தப்படுவதற்கான தேவை ஏற்பட்டால் அது குறித்து அறிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மரம் முறிந்து விழுதல், விலங்குகளின் செயற்பாடு, மின்பிரப்பாக்கிகள் பிரச்சினை உள்ளிட்டவைகளால் ஒரு நாளைக்கு அதிக தடவைகள் மின் துண்டிக்கப்பட வேண்டி ஏற்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாலை 6.30 தொடக்கம் இரவு 9.30 வரையான மூன்று மணித்தியாலங்கள் அதிகம் மின் செலவிடப்படுவதாகவும் அதன்போது மின்சாரத்தை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில், எவர் கேலிச் சித்திரம் வரைந்து தாக்குதல் நடத்தினாலும் எதிர்காலத்தில் மின் தடை ஏற்படுத்தப்பட மாட்டாதென அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
0 comments:
Post a Comment