Tuesday, July 12, 2011

தேர்தல் வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய 44 பேர் கைது

65 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் இம்மாதம் 23ம் திகதி நடைபெறவுள்ள நிலையில் இதுவரையில் 44 தேர்தல் வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல் வன்முறைகளை கண்கானிக்கும் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இவற்றுள் 50% முறைப்பாடுகள் தேர்தல் சட்ட திட்டங்களை மீறியமை தொடர்பாக கிடைக்கப்பெற்றதாக தேர்தல்களுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ண தெரிவிக்கின்றார்.

மேலும், இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய 44 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் வடக்கில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் தேர்தல் வன்முறைச் சம்பவங்களால் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொள்வதற்கு மக்கள் அஞ்சுவதாகவும் வடக்கில் அரசியல் சுதந்திரத்தை நிலைநாட்டி நீதியானதும், நியாயமானதுமான தேர்தலை நடத்துவதற்கு வழிசமைத்துக் கொடுக்க வேண்டியது அரசின் கடமை என்றும் கபே அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment