Tuesday, July 12, 2011

சரத் பொன்சேகா மீதான வழக்கு நவம்பர் வரை ஒத்திவைப்பு

சரத் பொன்சேகா மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளர் சேனக டி சில்வாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கினை நவம்பர் 14ம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின் போது இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்களை பணிக்கமர்த்திய குற்றச்சாட்டின் பேரிலேயே இவ்வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சரத் ​​பொன்சேகா சார்பாக ஆஜராகும் பிரதான சட்டத்தரணி நலின் லதுவஹெட்டி பிரிதொரு வழக்கிற்கு சென்றிருந்ததால் பிரதிவாதி சார்பில் ஆஜரான மற்றுமொரு சட்டத்தரணி வழக்கை பிரிதொரு தினத்தில் எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜயசுந்தர நவம்பர் 14ம் திகதிவரை விசாரணையை ஒத்திவைத்தார். மேலும் வழக்கு தொடர்பான அனைத்து சாட்சிகள் குறிப்பிட்ட நாளில் நீதிமன்றில் ஆஜராக வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment