Tuesday, July 12, 2011

ஹாலிவுட் நடிகையுடன் சிம்ரன்

சுத்தமாக சினிமா வாய்ப்பே இல்லாவிட்டாலும், சினிமா சம்பந்தப்பட்ட பெரிய நிகழ்வுகளில் இருக்குமாறு பார்த்துக் கொள்கிறார் சிம்ரன்.

இப்படித்தான் சமீபத்தில் டொரண்டோவில் நடந்த சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் பங்கேற்றார். இவ்விழாவுக்கு தமிழகத்திலிருந்து போன ஒரே நடிகை சிம்ரன்தான்.

விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் பிரபல ஹாலிவுட் நடிகை ஹிலாரி ஸ்வாங் பங்கேற்றார். அப்போது அவருடன் அறிமுகம் ஏற்பட்டதாம் சிம்ரனுக்கு.

அப்போது ஹிலாரியும் சிம்ரனும் சிறிது நேரம் சந்தித்து உரையாடினார்கள். இருவரும் சேர்ந்து போட்டோவும் எடுத்துக் கொண்டனர்.

இச்சந்திப்பு குறித்து சிம்ரன் கூறும்போது, "ஹிலாரி இந்திய சினிமா, மற்றும் இங்குள்ள வித்தியாசமான கலாசரங்கள் பற்றி தெரிந்து கொள்ளுவதில் ஆர்வமாக இருக்கிறார். அவருக்கு இந்திய சினிமா என்பது பாலிவுட் மட்டுமல்ல, அதையும் தாண்டியது என்பதைப் புரிய வைத்தேன்.

உடனே இங்குள்ள பல்வேறு மொழி திரைப்படங்கள் பற்றியும் அறிந்து கொள்ள விரும்பினார். என்னுடன் தொடர்பில் இருப்பதாக கூறியுள்ளார்," என்றார்.Topics: simran, hilari swank, hollywood, ஹாலிவுட், ஹிலாரி ஸ்வாங்க், சிம்ரம் சந்திப்பு

0 comments:

Post a Comment