ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான் கீ மூனுக்கும் இடையே அண்மையில் இடம்பெற்ற சந்திப்பானது சம்பிரதாயபூர்வமானது என கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பதவிக்கு பான் கீ மூன் இரண்டாவது தடைவையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு வாழ்த்து தெரிவிக்கும் முகமாகவே இந்த சந்திப்பு இடம்பெற்றதாகவும் திஸ்ஸ அத்தநாயக்க இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது தெரிவித்தார்.
இருப்பினும் இந்த சந்திப்பின் போது தருஸ்மன் அறிக்கை, இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டார். மேலும் மனித உரிமை மீறல், யுத்த குற்ற விசாரனைகள் குறித்தும் பாங் கீ மூன் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எடுத்துரைத்துள்ளதாகவும் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment