« குழந்தை பிறந்தவுடன் எப்படிப்பட்ட உணவை உண்ண வேண்டும்? D அண்ட் C செய்து கொண்டால் பிறகு கர்ப்பம் தரிப்பதில் ஏதேனும் சிக்கல்கள் உண்டாகுமா? » அதிக உடல் பருமன் ஆயுளைக் குறைக்கும்Published December 16, 2011 பல காலம் தொடர்ந்து இருக்கும் உடல் பருமனால் ஏற்படக் கூடிய நீண்ட கால பாதிப்புகள் முன்பு எண்ணப்பட்டதை விட மோசமாக இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.கூடுதல் எடையுடன் ஒருவர் எவ்வளவு காலம் இருக்கிறாறோ அவ்வளவுக்களவு அவரின் ஆயுட்காலம் குறையும் என்றும் – பருமனால் ஏற்படக் கூடிய வியாதிகளால் உயிரிழக்கும் அபயாம் இரட்டிப்பாகிறது என்றும் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
முந்தைய ஆய்வுகளைப் போலல்லாமல் ஒருவரின் ஆயுட்காலத்தில் கூடுதல் பருமனால் எத்தகைய பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பது, முதல் முறையாக இதில் ஆராயப்பட்டுள்ளது.அமெரிக்காவில் சுமார் 50 ஆண்டு காலமாக, ஐயாயிரம் பேரின் உடல் நலம் மற்றும் உடல் எடை போன்றவற்றை கவனித்து செய்யப்பட்ட ஆய்வில் இந்த முடிவுகள் தெரியவந்துள்ளன.பத்தாண்டுகள் கூடுதல் பருமனுடன் ஒருவர் இருந்தால், பருமன் தொடர்புடைய நோய்களால் அவர் இறப்பதற்கான வாய்ப்புகள் இரட்டிப்பாவதாக கண்டறியப்பட்டுள்ளது.ஒருவர் எவ்வளவு ஆண்டுகள் கூடுதல் பருமனுடன் இருந்தார் என்பதை கண்டறிந்த பிறகு, அதற்குரிய சிகிச்சைகளை டாக்டர்கள் வழங்க முற்பட வேண்டும் என்றும். அப்போதுதான் அது சரியான பயனைத் தரும் என்றும் ஜர்னல் ஆஃப் எபிடிமாலஜி என்ற மருத்துவ சஞ்சிகையில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment