« இங்கிலாந்தில் அதிகம் விபசாரத்தில் ஈடுபடும் மாணவிகள்! அதிர்ச்சி எலிசபெத் டெய்லரின் நகைகள் ரூ 580 கோடிக்கு ஏலம்Published December 16, 2011 பிரபல ஆலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர்இ 79 வயதில் மரணமடைந்தார். எனினனும் பகழ் என்னும் மறையவில்லை, அவர் பயன்படுத்திய முத்துக்கள், வைரங்கள் இந்திய நகைகள் போன்றவற்றை அமெரிக்காவை சோ்ந்த ஏல நிறுவனம் ஒன்று ஏலம் விட்டது. சுமார் 4 மணிநேரம் நடந்த ஏலத்தில் எலிசபெத் டெய்லரின் நகைகள் மட்டும் 2 மணிநேரம் ஏலம் விடப்பட்டன.
33 கேரட் வைர மோதிரம், பிரஸ் லெட், முத்து மாலை என அவருடைய 80 வகையான நகைகள் ஏலம் விடப்பட்டது மொத்தம் ரூ. 580 கோடிக்கு விற்பனையானது. இது எதிர்பார்த்ததை விட ரூ.100 கோடி அதிகமாகும். திருமணம் மற்றும் விவகாரத்துக்கு பெயர் பெற்ற நடிகை எலிசபெத் டெய்லரை இரண்டு முறை திருமணம் செய்த ரிச்சர்டு பர்டன் பரிசளித்த இரண்டு நகைகளும் ஏலத்தில் இடம் பெற்றன. ரிச்சர்ட் பார்டன் அவரது சக நடிகராவார். இந்த நகைகளில் அநேகமானவை மைக் டொட் வழங்கியவை. அவருடைய ஏழு கணவன்மார்களில் அவர் மைக் டொட்டை மட்டுமே விவாகரத்து செய்யவில்லை. அவர்கள் இருவரும் திருமணம் செய்து ஒரு வருட காலத்துக்குள் டொட் இறந்து விட்டார்.அவரிடம் இருந்த நகைகளின் தொகுப்பு உலகப் புகழ் பெற்றவை ஆகும். 33.19 கேரட் எடை உள்ள வைரத்தையும் இவர் வைத்து இருந்தார். அது எலிசபெத் டெய்லர் வைரம் என்றே அழைக்கப்பட்டு வந்தது. இதன் மதிப்பு மட்டும் ரூ. 12 கோடியே 50 இலட்சம் ஆகும்.இதே எலத்தில் 16ம் நூற்றாண்டை சேர்ந்த 55 கேரட் (203 கிரேய்ன்) முத்து மாலையும் ஏலம் விடப்படடது அது ஒரு கோடியே 20 லடசம் ரூபாய்க்கு ஏலம் போனது இங்கிலாந்து ராணி மற்றும் ஸ்பாணிஸ் அரசிகள் இந்த முத்து மாலையை பயன்படுத்தினார்கள் என்பது கூடுதல் சிறப்பு ஆகும்.
0 comments:
Post a Comment