Tuesday, September 6, 2011

இதயக் கோளாறு: சல்மானுக்கு மீண்டும் அறுவை சிகிச்சை

இந்தி நடிகர் சல்மான் கானுக்கு வரும் ஜனவரி மாதம் மீண்டும் அறுவை சிகிச்சை நடக்கப்போவதாக அவரது குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன.

நடிகர் சல்மான் கானுக்கு டிரைஜெமினல் நியூரால்ஜியா(Trigeminal Neuralgia) என்னும் நரம்புப் பிரச்சனை இருந்து வந்தது. இதனால் அவரது தாடைப் பகுதியில் வலி ஏற்பட்டு அவஸ்தை பட்டு வந்தார். இதையடுத்து அவருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதி அமெரிக்காவில் அறுவை சிகிச்சை நடந்தது.

சுமார் 8 மணி நேரம் நடந்த அந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து சல்மான் குணமடைந்துள்ளார். அடுத்த வாரம் அவர் பழையபடி படப்பிடிப்புகளில் கலந்து கொள்வார் என்று அவரது தங்கை கணவர் தெரிவித்தார்.

இதற்கிடையே சல்மானுக்கு அறுவை சிகிச்சை நடந்த அதே நாளில் வெளியான பாடிகார்ட் படம் சக்கை போடு போடுகிறது. ரிலீஸான முதல் 5 நாட்களில் ரூ. 88 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சல்மான் இதயத்தில் இருந்து பிற பாகங்களுக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் தமனியில் வீக்கம் இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதற்காக அவருக்கு வரும் ஜனவரி மாதம் மீண்டும் அறுவை சிகிச்சை நடக்க உள்ளது என்று அவரது குடும்ப வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. .ads_by_goolge_txt_top{font-family: arial;font-size:12px;color:#959595 !important;text-decoration:none;}.google_text_ad_single_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_multi_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_desc_top{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_top{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}.ads_by_goolge_txt_bottom{font-size:12px;font-family: arial;color:#959595 !important;}.google_text_ad_single_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_multi_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_desc{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_desc_bottom{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_bottom{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}

0 comments:

Post a Comment