மங்காத்தா படத்தில் அறிமுகமான நடிகர் மகத்தும் ஆடுகளம் நாயகி டாப்ஸியும் காதலில் விழுந்துள்ளதாக கோடம்பாக்கம் கிசுகிசுக்க ஆரம்பித்துள்ளது.
பொதுவாக கிசுகிசுக்கள் நடிகர்களாலேயே கிளப்பிவிடப்படுவது வழக்கம். அதுவும் வளரும் நடிகர்கள் என்றால், தாங்களே கிசுகிசுக்களை மீடியாவுக்கு 'எடுத்துக் கொடுப்பது' தமிழ் சினிமாவில் சமீப காலமாக அதிகரித்துள்ளது.
பிரபலமான ஹீரோயினுடன் இணைத்து இளம் நடிகர்கள் கிசு கிசு பரப்புவார்கள். அது கொஞ்ச நாளைக்கு மீடியாவில் அவர்களை உயிர்ப்புடன் காட்டும். சில நடிகைகளும் இதைச் செய்வது வழக்கம்.
ஆடுகளம் என்ற படத்தில் அறிமுகமாகி, இப்போது வந்தான் வென்றானில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்துள்ள டாப்ஸிக்கும், மங்காத்தாவில் ஒரு கேரக்டர் ரோலில் வந்துள்ள சிம்புவின் நண்பர் மகத்துக்கும் காதல் ஏற்பட்டுள்ளதாக கிசுகிசு பரவி வருகிறது.
தயாரிப்பாளர் தயாநிதி அழகிரிக்கும் நெருங்கிய நண்பர் மகத். தயாநிதிதான் இவரகை நடிகராக்க பலமாக சிபாரிசு செய்தவர்.
டாப்சியும் மகத்தும் ஓட்டல்களில் அடிக்கடி காணப்படுவதாகவும், டாப்ஸியின் படப்பிடிப்பில் மகத்தையும் பார்க்க முடிவதாகவும் கூறுகிறார்கள். டாப்ஸிக்கு மகத்தான் தமிழ் கற்றுக் கொடுக்கிறாராம்.
இந்தத் தகவல்கள் மீடியாவுக்கு கிடைத்தது யார் மூலம் என்புது தெரிந்தால், இந்த கிசுகிசு எந்த அளவுக்கு நிஜம் என்பது தெரிந்துவிடும் என்கிறார்கள் அனுபவம் வாய்ந்த நிருபர்கள்! தகவல் கொடுத்தது மகத்தா... டாப்ஸியா?Newsletter Its Free!உங்கள் இன்பாக்சி்ல் லேட்டஸ்ட் செய்திகள் .ads_by_goolge_txt_top{font-family: arial;font-size:12px;color:#959595 !important;text-decoration:none;}.google_text_ad_single_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_multi_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_desc_top{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_top{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}.ads_by_goolge_txt_bottom{font-size:12px;font-family: arial;color:#959595 !important;}.google_text_ad_single_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_multi_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_desc{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_desc_bottom{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_bottom{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}
0 comments:
Post a Comment