Friday, September 30, 2011

அடிக்கடி இமயமலை போகும் ரகசியம்... - விஷால் பேட்டி

இயமலையைத் தெரியாதவர்கள் இல்லை என்றாலும், அங்கே போய் ஆன்மீக அமைதி பெற்று வருவதை பிரபலமாக்கிய பெருமை சூப்பர் ஸ்டார் ரஜினிக்குதான் உண்டு. அதன் விளைவு, இமயமலை என்றதுமே உடன் நினைவுக்கு வருபவர் ரஜினிதான்.

இதனால், வேறு எந்த நடிகர் இமயமலையைப் பற்றிப் பேசினாலும், ரஜினியின் பாதிப்பு அல்லது ரஜினியைப் போல இமயமலைக்குப் போவதாக எழுத ஆரம்பித்துவிட்டார்கள்.

இந்த இமயமலை நடிகர்கள் பட்டியலில் லேட்டஸ்டாக இணைந்திருப்பவர் விஷால்.சமீபகாலமாக அடிக்கடி இமயமலைக்கு சென்று வருகிறாராம். ரஜினிகாந்தைப் போல் இவரும் ஆன்மிக பயணம் செல்வதாகவும், இமயமலையில் உள்ள குகைகளில் தங்கியிருந்து தியானம் செய்வதாகவும் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

உண்மையில் இவர் எதற்காக இமயமலை போகிறார்... உண்மையிலேயே விஷயமிருக்கிறதா அல்லது பப்ளிசிட்டி ஸ்டன்ட்டா என கேள்வி எழுந்தது. அந்தக் கேள்வியை விஷாலிடமே கேட்டுவிட்டனர் நிருபர்கள்.

அவர் கூறுகையில், "இமயமலை, எனக்கு மிகவும் பிடித்த இடம். என் தந்தை ஜி.கே.ரெட்டி, 'ஐ லவ் இந்தியா' என்ற படத்தை தயாரித்தபோது, எனக்கு 16 வயது.

அந்த படத்தின் படப்பிடிப்பு இமயமலையில் உள்ள பல்வேறு பகுதிகளில் நடந்தது. அப்போதுதான் நான் முதன்முதலாக இமயமலைக்கு சென்றேன். 45 நாட்கள் அங்கு தங்கியிருந்தேன்.

அதன்பிறகு 10 முறை நான் இமயமலைக்கு போய் வந்து விட்டேன். 'அவன் இவன்' படம் முடிந்ததும், எனக்கு முழுமையான ஓய்வு தேவைப்பட்டது. அந்த படத்தில் நான் ஒன்றரை கண் உள்ளவனாக நடித்து இருந்தேன். அதனால் என் கண்களுக்கும், மனசுக்கும் ஓய்வு தேவைப்பட்டது. உடனே இமயமலைக்கு புறப்பட்டேன். அங்கு 10 நாட்கள் தங்கியிருந்தேன்.

இமயமலை செல்லும்போதெல்லாம் அங்குள்ள ஆனந்தா ஸ்பா என்ற இடத்தில்தான் தங்குவேன். அங்கிருந்து ரிஷிகேஷ், பத்ரிநாத், குலுமனாலி ஆகிய இடங்களுக்கு 'பைக்'கில் செல்வேன். பஸ் கூரை மீது கூட பயணித்திருக்கிறேன்.

ஆன்மீக பயணம் அல்ல...

ஆன்மிக பயணத்துக்காக நான் இமயமலை செல்வதில்லை. ஓய்வு எடுப்பதற்காகவே போகிறேன். என்னை அங்கு யாருக்கும் தெரியாது என்பதால், சுதந்திரமாக நடமாட முடிகிறது. அங்கு, கங்கா நதிக்கு தினமும் பூஜை நடைபெறுகிறது. ஒரே ஒரு நாள் அந்த பூஜையில் கலந்துகொண்டேன்.

லடாக்கில் மயங்கிய சமீரா

வடநாட்டில் எனக்கு பிடித்த இன்னொரு இடம், லடாக். ஆனால், அங்கு ஆக்சிஜன் குறைவு. 'வெடி' படத்துக்காக, 2 பாடல் காட்சிகளை அங்கு படமாக்கினோம். டாக்டர்கள் குழுவையும், ஆக்சிஜன் சிலிண்டரையும் கூடவே வைத்துக்கொண்டு படப்பிடிப்பை நடத்தினோம். அப்படியிருந்தும் சமீராரெட்டி மயங்கி விழுந்து விட்டார். ஒரு நாள் படப்பிடிப்பை ரத்து செய்ய வேண்டியதாகி விட்டது,'' என்றார்.Written by: ShankarNewsletter Its Free!உங்கள் இன்பாக்சி்ல் லேட்டஸ்ட் செய்திகள் .ads_by_goolge_txt_top{font-family: arial;font-size:12px;color:#959595 !important;text-decoration:none;}.google_text_ad_single_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_multi_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_desc_top{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_top{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}.ads_by_goolge_txt_bottom{font-size:12px;font-family: arial;color:#959595 !important;}.google_text_ad_single_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_multi_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_desc{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_desc_bottom{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_bottom{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}

0 comments:

Post a Comment