பெங்களூர்: மனைவியைக் கத்தியால் குத்திப் படுகாயமடையச் செய்த பிரபல கன்னட நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டார். பிரபல நடிகர் ஒருவர் இவ்வாறு நடந்து கொண்ட செயல் கர்நாடகத்தில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கன்னடத்தில் பிரபலமான இளம் நடிகர் தர்ஷன். இவர் பழம்பெரும் நடிகர் தூகுதீபா ஸ்ரீனிவாஸின் மகன் ஆவார். பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவரது மனைவி பெயர் விஜயலட்சுமி. இவர்களுக்கு வினீஷ் என்ற 3 வயது மகன் உள்ளான்.
குடும்பச் சண்டை காரணமாக கணவனும், மனைவியும் சில மாதங்களுக்கு முன்பு பிரிந்தனர். தர்ஷன் தனியாகவும், அவரது மனைவி தனது குழந்தையுடனும் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலையில் விஜயலட்சுமி தங்கியிருந்த அவரது நண்பரின் வீட்டுக்கு தர்ஷன் ஆவேசமாகப் போயுள்ளார். அங்கு விஜயலட்சுமியுடன் கடும் வாக்குவாதம் புரிந்துள்ளார். பின்னர் அவரை சரமாரியாக தாக்கி குத்தியுள்ளார். பின்னர் தனது ரிவால்வரை எடுத்து மனைவியையும், மகனையும் கொன்று விடுவதாக மிரட்டினார்.
தாக்குதலில் விஜயலட்சுமி படுகாயமடைந்து வீழ்ந்தார். அதன் பின்னர் அங்கிருந்து தர்ஷன் போய் விட்டார். உடனடியாக விஜயலட்சுமியை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். படுகாயமைடந்துள்ள அவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தகவல் அறிந்து விரைந்து வந்த விஜயநகர் போலீஸார் தர்ஷனைக் கைது செய்தனர்.
நீண்ட காலமாக சினிமாவில் நடித்து வரும் தர்ஷன் அனைவரிடமும் நல்ல பெயர் எடுத்து வைத்துள்ள ஒரு கலைஞர் ஆவார். எந்தவிதமான கிசுகிசுவிலும் சிக்காதவர். இந்த நிலையில் அவர் இப்படி நடந்து கொண்டது அவரது ரசிகர்களுக்கும், கர்நாடக மக்களுக்கும் அதிர்சி அளித்துள்ளது.Newsletter Its Free!உங்கள் இன்பாக்சி்ல் லேட்டஸ்ட் செய்திகள் .ads_by_goolge_txt_top{font-family: arial;font-size:12px;color:#959595 !important;text-decoration:none;}.google_text_ad_single_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_multi_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_desc_top{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_top{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}.ads_by_goolge_txt_bottom{font-size:12px;font-family: arial;color:#959595 !important;}.google_text_ad_single_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_multi_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_desc{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_desc_bottom{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_bottom{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}
0 comments:
Post a Comment