Friday, September 23, 2011

'நடிகையின் வாக்குமூலம்'த்தில் செல்வராகவனை 'வெறுப்பேற்றுகிறாரா' சோனியா?

சோனியா அகர்வால் நாயகியாக நடிக்கும் ஒரு நடிகையின் வாக்குமூலம் படத்தில், அவரது முன்னாள் கணவர் இயக்குநர் செல்வராகவனை வெறுப்பேற்றும் வகையில் ஒரு கேரக்டர் உருவாக்கப்படுவதாக எழுந்துள்ள வதந்தியை மறுத்துள்ளார் படத்தின் இயக்குநர் ராஜ் கிருஷ்ணா.

'ஒரு நடிகையின் வாக்கு மூலம்' என்ற பெயரில் நடிகர், நடிகைகளின் நிஜ வாழ்க்கை கதை படமாகிறது. இந்த படத்தை ராஜ்கிருஷ்ணா இயக்குகிறார். இதில் பாதிக்கப்படும் நடிகை வேடத்தில் சோனியா அகர்வால் நடிக்கிறார். திருமணமாகி, விவாகரத்து பெற்ற பிறகு சோனியா ஹீரோயினாக நடிக்கும் படம் இது.

நடிகையான பிறகு சோனியா சந்தித்த நெருக்கடிகள் மற்றும் திருமண வாழ்க்கை விவாகரத்து போன்றவை இதில் இடம்பெற்றுள்ளனவாம். சோனியா அகர்வாலின் சொந்த வாழ்க்கையே இந்த படம் என்றும் கணவர் வேடத்தில் நடிக்க செல்வராகவன் தோற்றத்தில் நடிகர் தேடுவதாகவும் செய்திகள் வெளியாயின.

இதுகுறித்து இயக்குனர் ராஜ்கிருஷ்ணாவிடம் கேட்ட போது, "நான் நிறைய நடிகைகளை சந்தித்திஇருக்கிறேன். அவர்கள் பட்ட சிரமங்களை நேரில் அறிந்தும் இருக்கிறேன். அதை 'ஒரு நடிகையின் வாக்குமூலம்' என்ற பெயரில் படமாக எடுக்கிறேன். ஒவ்வொரு நடிகையின் வாழ்வில் நடந்த ஓரிரு சம்பவங்கள் இப்படத்தில் இருக்கும். அப்படி எல்லா நடிகைகளும் சந்தித்த நிகழ்வுகள் இப்படத்தில் தொகுக்கப்பட்டுள்ளது.

இப்படம் முழுக்க சோனியா அகர்வாலின் வாழ்க்கை கதை என்பது சரியல்ல. கதையைக் கேட்டபோது, என் வாழ்க்கையிலும் இதுபோன்று ஓரிரு சம்பவங்கள் நடந்துள்ளன என்றார் சோனியா. அவர் நடிப்பதால் இந்தப் படம் அவரது சொந்த வாழ்க்கைக் கதையின் அடிப்படையில் படமாக்கப்படுவதாக ஒரு இமேஜ் பரவிவிட்டது. அவர் வாழ்க்கையில் நடந்தவை இரண்டே சீன்கள்தான் படத்தில் இருக்கும்.

செல்வராகவன் போன்று இப்படத்தில் ஒரு கேரக்டரை உருவாக்கி இருப்பதாக வெளியான செய்தியிலும் உண்மை இல்லை. நடிகைகளான எனது சகோதரிகளை புண்படுத்தும் காட்சிகளோ சக இயக்குநரை அவமதிக்கும் காட்சியோ இப்படத்தில் இருக்காது," என்றார்.Written by: ShankarNewsletter Its Free!உங்கள் இன்பாக்சி்ல் லேட்டஸ்ட் செய்திகள் .ads_by_goolge_txt_top{font-family: arial;font-size:12px;color:#959595 !important;text-decoration:none;}.google_text_ad_single_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_multi_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_desc_top{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_top{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}.ads_by_goolge_txt_bottom{font-size:12px;font-family: arial;color:#959595 !important;}.google_text_ad_single_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_multi_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_desc{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_desc_bottom{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_bottom{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}

0 comments:

Post a Comment