Monday, September 5, 2011

பிரபாகரன் தலைப்பை மாற்றியது ஏன்? - பிரபுதேவா விளக்கம்

பிரபாகரன் என் தலைப்பு பவர்புல்லானது. ஆனால் அதைப் பயன்படுத்த எதிர்ப்பு கிளம்பியதால் வெடி என்ற தலைப்பை வைத்தேன், என இயக்குநர் பிரபு தேவா கூறினார்.

விஷால், சமீரா ரெட்டி ஜோடியாக நடிக்கும் படம் வெடி. பிரபு தேவா இயக்குகிறார். ஜிகே பிலிம் கார்ப்பொரேஷன் தயாரிக்கிறது.

இப்படத்துக்கு முதலில் பிரபாகரன் என பெயர் வைத்தனர். ஒரு வணிக ரீதியான மசாலா படத்துக்கு விடுதலைப்புலிகளின் தேசிய தலைவர் பிரபாகரன் பெயரைச் சூட்டுவது, அந்த மாபெரும் தலைவரை இழிவுபடுத்துவதாக தமிழ் ஆர்வலர்கள் எதிர்ப்புகள் தெரிவித்து அறிக்கைகள் விட்டனர்.

இதையடுத்து படத்தின் தலைப்பு வெடி என மாற்றிவிட்டார் பிரபுதேவா (வெடியையும் புலிகளையும் மட்டும் பிரிக்க முடியுமா!).

இதுகுறித்து நிருபர்களிடம் பிரபுதேவா கூறுகையில், "தெலுங்கில் ஹிட்டான 'சௌரியம்' படத்தின் தமிழ் ரீமேக்கே வெடி. இதில் விஷாலின் கேரக்டர் பெயர் பிரபாகரன்.

இதையே படத்தின் தலைப்பாக்கினோம். நல்ல பவர்புல் தலைப்பு. ஆனால் எதிர்ப்பு கிளம்பியதால் எதற்கு வீண் சர்ச்சை எனக் கருதி, வெடி என மாற்றி பெயர் வைத்தோம். இம் மாதம் இறுதியில் இப்படம் ரிலீசாகிறது.

விஷால், சமீரா ரெட்டி இருவரும் கேரக்டர்களுக்கு கச்சிதமாக பொருந்தி விட்டனர். அருமையாக வந்துள்ளது படம்," என்றார்.

0 comments:

Post a Comment