Monday, October 3, 2011

தீபிகாவின் புதுமனை புகு விழாவில் 'ஓவர் சத்தம்'-போலீஸ் வந்து நிறுத்தியது

மும்பை: இந்தி நடிகை தீபிகா படுகோனின் புது மனை புகு விழாவின்போது அதிக சத்தத்துடன் பாடலை ஒலிக்க விட்டு அக்கம் பக்கத்தினரை பெரும் துயரப்படுத்தி விட்டனர். இதையடுத்து அவர்கள் போலீஸாரை அழைக்க போலீஸார் வந்து சத்தத்தை நிறுத்தி பார்ட்டியையும் நிறுத்தினர்.

நடிகை தீபிகா படுகோன் மும்பை பிரபாதேவி பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் புது பிளாட் வாங்கியுள்ளார். இந்த பிளாட்டில் புதுமனை புகுவிழா நடந்தது. இதையொட்டி கோலாகல பார்ட்டிக்கும் ஏற்பாடு செய்திருந்தார் தீபிகா.

பார்ட்டி விடிய விடிய நடந்தது. மது விருந்துடன் தடபுடலாக நடந்த இந்த பார்ட்டியில் கலந்து கொண்டவர்கள் உச்சகட்ட ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பாடலையும் மிக சத்தமாக ஒலிக்க விட்டுள்ளனர். இதனால் அக்கம் பக்கத்தில் வசிப்போர் கடும் அவதிக்குள்ளானார்கள். இந்த குடிகார கூட்டத்தின் பாடல் மற்றும் ஆட்டத்தால் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பு முழுவதும் கடும் கோபமடைந்தது. உடனடியாக போலீஸாருக்குத் தகவல் அனுப்பினர்.

இதையடுத்து விரைந்து வந்த போலீஸார், 26வது மாடியில் உள்ள தீபிகாவின் பிளாட்டுக்குச் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் பாடல்களையும், ஆட்டத்தையும் நிறுத்துமாறு உத்தரவிட்டனர். அதன் பின்னர் ஆடிக் கொண்டிருந்த தீபிகா உள்ளிட்டோர் வருத்தம் தெரிவித்ததோடு பார்ட்டியையும் நிறுத்திக் கொண்டனர். அப்போது மணி அதிகாலை 3.15 ஆகும். பார்ட்டி முடியும் வரை அக்கம் பக்கத்தில் வசித்தோர் தூங்கக் கூட முடியாமல் தவித்துள்ளனர்.

தீபிகா வீட்டில் நடந்த இந்தக் கூத்து குறித்து தகவல் காட்டுத் தீ போல பரவியது. இதையடுத்து அடுக்குமாடிக் குடியிருப்பின் கீழே பெருமளவில் மக்கள் திரண்டு விட்டனர். அதேபோல பத்திரிக்கையாளர்களும் வந்து விட்டனர். இதைப் பார்த்த போலீஸார் அந்த வழியாக வந்தால் பத்திரிக்கையாளர்கள் கேள்விகளைக் கேட்டு துளைத்து எடுப்பார்கள் என்று பயந்து வேறுவழியாக வெளியேறி விட்டனர்.

இப்படி அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை நிம்மதியிழக்கச் செய்து, ஆட்டம் போட்ட தீபிகா உள்ளிட்டோருக்கு அபராதம் ஏதும் விதிக்கப்பட்டதா என்பது குறித்து போலீஸ் தரப்பில் ஒன்றும் தெரிவிக்கவில்லை.

தீபிகா வீட்டில் நடந்த இந்த கூத்து நிகழ்ச்சியில் விஜய் மல்லையா, நடிகர்கள் இம்ரான் கான், அவரது மனைவி அவந்திகா, அபய் தியோல், ப்ரீத்தி தேசாய், அமிதாப் பச்சன், கரண் ஜோஹர், பிரியங்கா சோப்ரா, சித்தார்த் மல்லையா, ஷாஹித் கபூர், அனுஷ்கா சர்மா, ரிதீஷ் தேஷ்முக், ரன்வீர் சிங், ஜெனிலியா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

இந்த விருந்து குறித்து அமிதாப் பச்சன் விடுத்துள்ள ட்விட்டர் செய்தியில், நான்தான் இந்த பார்ட்டியிலேயே மிகவும் வயதான கெஸ்ட் எனறு பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர், நடிகையர்களுக்கு வழக்கமாக ஏதாவது பண்ணை வீடு ஒன்று இருக்கும். அங்குதான் இதுபோன்ற கூத்துக்களை பெரும்பாலும் அரங்கேற்றுவார்கள். . தீபிகாவும் பேசாமல் ஒரு பண்ணை வீட்டை வாங்கிக் கொண்டால் எதிர்காலத்தில் இதுபோன்ற குழப்பங்களைத் தவிர்க்கலாம்.Written by: ArivalaganNewsletter Its Free!உங்கள் இன்பாக்சி்ல் லேட்டஸ்ட் செய்திகள் .ads_by_goolge_txt_top{font-family: arial;font-size:12px;color:#959595 !important;text-decoration:none;}.google_text_ad_single_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_multi_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_desc_top{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_top{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}.ads_by_goolge_txt_bottom{font-size:12px;font-family: arial;color:#959595 !important;}.google_text_ad_single_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_multi_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_desc{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_desc_bottom{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_bottom{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}

0 comments:

Post a Comment