Friday, December 30, 2011

நாட்டுக் கோழி குழம்பு.

« D அண்ட் C செய்து கொண்டால் பிறகு கர்ப்பம் தரிப்பதில் ஏதேனும் சிக்கல்கள் உண்டாகுமா? விண்டோஸ் 7 மற்றும் XP இயங்குதளத்திற்கு MultiBoot USB டிரைவ் உருவாக்குவதற்கு… » நாட்டுக் கோழி குழம்பு.Published December 29, 2011

தேவையான பொருட்கள்    1. கோழி – 1 கிலோ
    2. சின்ன வெங்காயம் – 35
    3. தக்காளி – 2
    4. தேங்காய் துருவல் – 1/4 சின்ன தேங்காய்
    5. கறிவேப்பிலை – 6 கொத்து
    6. கொத்தமல்லி – சிறிது
    7. மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
    8. மிளகாய் தூள் – 3 தேக்கரண்டி
    9. மல்லி தூள் – 2 1/2 தேக்கரண்டி
    10. உப்பு
    11. கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி
    12. சோம்பு – 1 தேக்கரண்டி
    13. பச்சை மிளகாய் – 2
    14. எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சோம்பு சேர்த்து தாளித்து, சின்ன வெங்காயம் 15, கறிவேப்பிலை 4 கொத்து சேர்த்து வதக்கவும்.வதங்கியதும் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி, இத்துடன் மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.இதை மசாலாவாக அரைக்கவும்.பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.இதில் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.மஞ்சள், தூள், கரம் மசாலா, கோழி சேர்த்து வதக்கி, குக்கரில் வைத்து வேக வைக்கவும்.பின் அடுப்பில் வைத்து அரைத்த மசாலா தண்ணீா் சோ்க்காமல்  உப்பும் போட்டு எண்ணெய் திரண்டு வர கொதிக்க வைத்து எடுக்கவும்.

 

0 comments:

Post a Comment